'Bagheera' movie review: Srii Murali wins hearts as a sharp-witted superhero

Follow Us :

Follow us on :

Recent Notifications

Loading notifications... Please wait.

Published :

Last Updated : 04 Mar, 2023 03:02 PM

Published : 04 Mar 2023 03:02 PM Last Updated : 04 Mar 2023 03:02 PM

பஹீரா Review: அபத்தம், வக்கிரம், பிற்போக்கு மற்றும் பல!

bagheera tamil movie review in tamil

‘ஒரே ஒரு நபரை மட்டுமே காதலிக்கும் பெண்தான் நல்ல பெண். தன் வாழ்வில் பல காதலர்களைக் கொண்ட பெண்கள் அனைவரும் கொல்லப்படவும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவும் உரியவர்கள்’ என்ற உலகமகா கருத்தை சொல்லும் படம் ‘பஹீரா’.

டெடி பியர் மூலம் தொடர்ந்து கொலைகள் அரங்கேற, அலர்ட் ஆகிறது காவல் துறை. குறிப்பாக, ஆண்களை ஏமாற்றுவதாக கூறப்படும் பெண்கள் டெடி பியரால் தேடித் தேடி கொடூரமாக கொல்லப்படுகின்றனர். மற்றொருபுறம் வெவ்வெறு கெட்டப்களில், வெவ்வேறு பெயர்களுடன் சென்னை, மும்பை, ஹைதராபாத்தில் உள்ள நான்கு பெண்களைக் காதலித்து திருமணம் செய்கிறார் ‘பஹீரா’ (பிரபுதேவா). அவர்களைக் கொல்லவும் திட்டமிடுகிறார். இறுதியில், அந்தக் கரடி பொம்மை கொலையாளி யார்? பெண்களை பஹீரா குறிவைக்க காரணம் என்ன? அவருக்கான பின்கதை என்ன? - இவற்றை பல்வேறு படங்களில் சாயல் கலந்து பிற்போக்குத்தனத்துடனும் சோதிக்கும் படம்தான் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘பஹீரா’.

2023-ல் அழுத்தமான ஒரு ‘பூமர்’ சினிமாவை தன்னால் முடிந்த அளவுக்கான ‘பூமர்’த்தனத்துடன் பெண் வெறுப்பை மட்டுமே முதலீடாக்கி உருவாக்கியிருக்கிறார் ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ பெருங்காவியத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படத்தின் முதல் பாதி ‘மன்மதன்’ படத்தின் சாயலை வாரிக்கொள்ள, கூடவே ‘பஹீரா’ ஆப் மூலமாக ஆண்களுக்கு விடுதலை பெற்று தரும் ஐடியா ‘அந்நியன்’ படத்தை நினைவூட்டுகிறது. கொடூரக் கொலைகள், விகாரமான உருவங்கள், அதீத வன்முறை என எந்த வித சுவாரஸ்யமுமின்றி ‘தேமே’வென கடக்கும் முதல் பாதி கண்ணைக்கட்டுகிறது.

கொலைக்கான காரணங்களை வெளிப்படுத்தும் பின்புலக்கதையும் கிட்டத்தட்ட ‘மன்மதன்’ படத்தையொட்டி இருப்பதால் அதுவுமே அழுத்தமாக இல்லை. பலவீனமான திரைக்கதை, புதுமையற்ற காட்சிகள், பெண் வெறுப்பை மையப்படுத்திய கதையில் இறுதியில் வரும் ‘பட்டுகோட்ட அம்மாளு’ பாடலும் அதற்கான காட்சிகளும் ஆறுதல்.

bagheera tamil movie review in tamil

‘திமிரு பிடிச்ச பொண்ணே திருந்து... திருந்தலன்னா தருவேன் மருந்து’, ‘பொண்ணுங்க சீட்டிங்.. பசங்க க்ரையிங்’ என்ற பாடல் வரிகள் தொடங்கி, “குடிக்கிற பசங்க படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. படிக்கிற பசங்க குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க”, “பொண்ணுங்களால தான் பசங்க பைத்தியமா சுத்துறாங்க”, “நல்ல தமிழ்ப் பொண்ணுங்க, புருஷன தவிர யார் தொட்டாலும் கோபப்படுவாங்க”, “ஒரு பொண்ணு ஒரு பையன ஏழு வருஷமா லவ் பண்ணுதா? நம்பவே முடியலயேம்மா” போன்ற பிற்போக்குத்தன வசனங்கள் எரிச்சலூட்டுகின்றன. ‘‘புல்லானாலும் புருஷன் சொல்ற பொண்ணுங்கள இப்போல்லாம் பாக்கவே முடியலையே” என்ற வசனம் மூலம் இயக்குநர் உலகத்துக்கு சொல்லவரும் மகத்தான தத்துவம் என்ன?

ஆதிக் ரவிச்சந்திரன் காட்சிப்படுத்தும் உலகில் ஆண்கள் அனைவரும் புனிதர்கள். எல்லா பெண்களும் ஆண்களை ஏமாற்றவே பிறப்பெடுத்தவர்கள் எனச் சொல்லுவது மட்டுமல்லாமல், “எத்தனை பேர ஏமாத்திருப்ப போ’’ என்று கூறி ஏமாற்றிய பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்ய தகுதியானவர்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வக்கிரத்தின் உச்சம். உண்மையில் கதையில் பிரபுதேவா மட்டும்தான் சைக்கோவா என்ற எண்ணம் இந்த இடத்தில் நமக்கு தோன்றாமல் இல்லை. அன்றாடம் நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும், அண்மையில் ரயில்வே நிலையத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை காதலன் ஒருவர் தள்ளிவிட்டுக் கொன்றது குறித்தும் இயக்குநருக்கான புரிதல் என்ன?

படத்தில் மற்றொரு ஆறுதல் பிரபுதேவா. இறுதியில் அவர் ‘பட்டுகோட்ட அம்மாளு’ பாடலைப்பாடும் காட்சிகளில் அவரது உடல்மொழியும், நக்கலும், பார்வையற்ற மாற்றுத் திறனாளியாகவும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். அழுத்தமான ட்ரேட் மார்க் நடனங்களால் ஈர்க்கிறார். அமீரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், காயத்ரி, ஜனனி, சாக்‌ஷி அகர்வால் என நடிகைகள் பட்டாளத்தில், அமீரா தஸ்தூர் கதாபாத்திரமும் நடிப்பும் முதன்மைபடுத்தப்பட்டுள்ளது. சிறப்புத் தோற்றத்தில் ஶ்ரீகாந்த் தனது கதாபாத்திரத்திற்கான பணியைச் சரியாகச் செய்திருக்கிறார். தவிர நாசர், சாய் குமார், கின்னஸ் பக்ரு முதலானவர்களுக்கு பெரிய அளவில் வேலையில்லை.

bagheera tamil movie review in tamil

மொத்தப் படத்திலும் பெண்வெறுப்பு, பிற்போக்குத்தனம், அபத்தமான வசனங்களை வைத்துவிட்டு இறுதியில் மட்டும் ஒரிரு டயலாக்கின் வழியே பெண்களுக்கு ஆதரவாக பேசுவதாகக் கூறி நியாயம் சேர்க்க முயற்சிப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை. படத்தின் இறுதியில் ‘ஆதிக் ரவிச்சந்திரன் பெயின் கில்லர்’ என பெயர் வருகிறது. அவரின் பெயினுக்கு நம்மை ஏன் கில் பண்ணுகிறார் என்பது புரியவில்லை.

இறுதியாக 25 ஆண்டுகளுக்குப் பிறகு என எதிர்காலத்தைக் காட்டும் காட்சியிலும் கூட பெண்கள் ஏமாற்றுபவர்களாகத்தான் இருக்கிறார்கள் என விளக்கக் காட்சி ஒன்றே போதும் ஆதிக் ரவிச்சந்திரனின் பெயினுக்கு பலியானது பார்வையாளர்கள் மட்டுமல்ல... மொத்த ‘பஹீரா’ படக்குழுவும் என்பது. பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஆண்களுக்குமான ஒரே மீட்பரா ‘பஹீரா’ பார்வையாளர்களை நெகட்டிவ் மோடில் பகீரடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

bagheera tamil movie review in tamil

அன்பு வாசகர்களே....

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

  •   போலீஸ் கதையை மீண்டும் இயக்கும் ஹரி
  •   ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’
  •   தாமரை டிவியில் வெளியானது ‘கிடுகு’
  •   சிரிக்க வைப்பது கடினம்: ஐஸ்வர்யா ராஜேஷ்

What’s your reaction? 6 Votes

Excited

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

Popular articles.

  • அதிகம் விமர்சித்தவை

bagheera tamil movie review in tamil

உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….

Agency Name : G SURESH,

Area Name : AnnaNagar West

  • Samayam News
  • சமந்தா, நாக சைதன்யா
  • பிக் பாஸ் 8
  • tamil cinema
  • How Is Bagheera Movie? Twitter Review

Bagheera Review: தரமான பர்ஃபாமன்ஸ்.. பஹீரா படம் எப்படி? டிவிட்டர் விமர்சனம்!

Bagheera review: பஹீரா படம் இன்று வெளியகியுள்ள நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்..

how is bagheera movie twitter review

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பரதன் பிக்சர்ஸின் ஆர்.வி. பரதன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் பஹீரா. இதில் நடிகர் பிரபு தேவா ஹீரோவாக நடித்து உள்ளார். படத்தின் புரோமோவும் பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தில் பிரபுதேவாவின் பலவிதமான தோற்றங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்த நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

​ Sushmita Sen: ரட்சகன் மட்மில்ல.. காதல் கோட்டையும் தான்... தமிழ் சினிமாவும் சுஷ்மிதா சென்னும்! ​

தியேட்டர் மெட்டீரியல்

தியேட்டர் மெட்டீரியல்

தெறிக்க விடும்

தெறிக்க விடும்

தரமான பர்ஃபாமன்ஸ்

தரமான பர்ஃபாமன்ஸ்

கைகோ த்ரில்லர்

கைகோ த்ரில்லர்

உங்களுக்கானவை

இன்றைய ராசிபலன் : 08 அக்டோபர் 2024 - Daily Horoscope

அடுத்த செய்தி

தி லெஜண்ட்: இதுக்காகத்தான் காத்துட்டு இருந்தோம்: அதிரடி அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்.!

contents

மொழியைத் தேர்வு செய்யவும்

தமிழில் உள்ள நுணுக்கங்கள்

Bagheera Review: பயமுறுத்துகிறதா? பதுங்கிப் போனதா? ‘பஹீரா’ அசத்தலான விமர்சனம்!

Share on Twitter

தனக்கு ஒரு வித்தியாசமான படம் வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான கதையை தேர்வு செய்திருக்கிறார் பிரபு தேவா. ஆனால், உண்மையில் அது வித்தியாசமாக இருந்ததா?

பஹிரா போஸ்டர்

தொடர்ந்து குழந்தைகளை குறி வைத்து படங்களை கொடுத்து வந்த பிரபுதேவா, இந்த முறை பெண்களை குறி வைத்து நடித்திருக்கும் படம் தான் பஹீரா. பெண்களை குறி வைத்து என்றால், அவர்களை கவரும் படம் என நினைத்து விட வேண்டாம், பெண்களை குறி வைத்து கொலை செய்யும் படம்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் பஹீரா

பிரபுதேவா நடிக்கும் பஹீரா!

இந்தப்படத்தில் பிரபுதேவாவுடன் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கணேசன் சேகர் இசையமைத்து இருக்கிறார்.

கதையின் கரு:

ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை காதலித்து ஏமாற்றும் பெண்களை டெடி பியர் ஒன்று தொடர்ந்து கொடூரமாக கொலை செய்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே நான்கு பெண்களை தன்னுடைய காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்து கொள்ளும் பஹீரா அவர்களையும் கொலை செய்ய முடிவெடுக்கின்றான். பஹீரா ஏன் இப்படி கொலை வெறிபிடித்து அலைகிறான்? அதற்கான பின்னணி என்ன? யார் அந்த டெடிபியர்? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே பஹீரா படத்தின் கதை!

சைக்கோ கொலைகாரனாக பிரபுதேவா!

சைக்கோ கொலைகாரனாக வரும் பிரபுதேவா பெர்ஃபாமன்ஸில் பின்னி பெடல் எடுக்கிறார். படத்தில் அவருக்கு பல்வேறு வேரியேஷன்கள்; அனைத்திலும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு அக்மார்க் தரம்.

அவரின் காதலிகளாக அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி என பலர் வந்தாலும் அமைரா தஸ்தூர் மட்டுமே மனதில் நிற்கிறார். பிற அனைவரும் காதலிகள் என ஏதோ வந்து போகிறார்கள்.

பஹீராவின் காதலிகள்!

ஆதிக்ரவிச்சந்திரனின் பழைய படங்களில் இருந்த கிளாமர் வெப்பம் இந்தப்படத்தில் கொஞ்சம் தணிந்திருக்கிறது. முதல் பாதியில் ரசிகர்களின் சுவாரஸ்சியத்தை கூட்ட, நான் லீனியர் பாணியில் கதை சொன்னாலும், ஒருக்கட்டத்தில் அது நமக்கு சலிப்பை மட்டுமே தந்தது. 

சரி இவ்வளவு கொடூரமாக கொலை செய்கிறான்.. அப்படியானால் அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கும் என்று இரண்டாம் பாதியை பார்த்தால், அந்தக்காரணமும் வலுவாக இல்லை. இதனால் பிரபுதேவா என்னதான் முக்கி முக்கி நடித்தாலும், படம் கையை விட்டு சென்றுவிட்டது. 

கிட்டத்தட்ட க்ளைமேக்ஸ் வரும் போதே ரசிகர்கள் எப்படா படத்தை முடிப்பீங்க என்ற மோடிற்கு வந்து விட்டனர். கணேசன் சேகரின் பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்க வில்லை என்றாலும் பின்னணி இசைக்கு பலம் சேர்த்து இருக்கிறார். அதிலும் சில இடங்களில் அதிக இரைச்சல். பிரபுதேவாவை நம்பி மட்டுமே செல்லாமல் இருந்திருந்தால்  ‘பஹீரா’ நிச்சயம் மிரட்டி இருப்பான்.

Whats_app_banner

COMMENTS

  1. 'Bagheera' movie review: Srii Murali wins hearts as a sharp …

    3.5 /5. Director: Dr Suri. Cast: Srii Murali, Rukmini Vasanth, Prakash Raj, Garuda Ram. N Vedanth (Srii Murali), fascinated by superheroes and driven by his mother’s idea of …

  2. ‘Bagheera’ movie review: Srii Murali roars in this action-packed ...

    ‘Bagheera’ movie review: Directed by Dr Suri, Srii Murali’s ‘Bagheera’ is an entertaining superhero story of a masked vigilante, elevated by Chethan D Souza’s stunts and …

  3. Bagheera (2024)

    Bagheera: Directed by D.R. Suri. With Sri Murali, Rukmini Vasanth, Prakash Raj, Rangayana Raghu. When society turns into a jungle, just one predator cries out for justice.

  4. பஹீரா Review: அபத்தம், வக்கிரம், …

    கலிலுல்லா. Last Updated : 04 Mar, 2023 03:02 PM. பஹீரா Review: அபத்தம், வக்கிரம், பிற்போக்கு மற்றும் பல! ‘ஒரே ஒரு நபரை மட்டுமே காதலிக்கும் …

  5. Bagheera Movie Review: Bagheera review: Sriimurali shines as …

    Bagheera Movie Review: Critics Rating: 3.5 stars, ... Tamil Nadu CM MK Stalin praises Sivakarthikeyan, Sai Pallavi's film 'Amaran' says "It's great to bring true stories"

  6. Bagheera Review: தரமான பர்ஃபாமன்ஸ்.. பஹீரா …

    டிவிட்டர் விமர்சனம்! பஹீரா படம் இன்று வெளியகியுள்ள நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் …

  7. Bagheera Review: பயமுறுத்துகிறதா? பதுங்கிப் …

    சைக்கோ கொலைகாரனாக வரும் பிரபுதேவா பெர்ஃபாமன்ஸில் பின்னி பெடல் எடுக்கிறார். படத்தில் …