தமிழ் டிப்ஸ்
- [ October 20, 2023 ] தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் Health
- [ October 20, 2023 ] விந்தணு குறைபாடு அறிகுறிகள் Health
- [ October 20, 2023 ] சமத்துவமே மகத்துவம் கட்டுரை கட்டுரைகள்
- [ October 20, 2023 ] பூமி நமக்கு சொந்தமானது அல்ல நாம் பூமிக்கு சொந்தமானவர்கள் கட்டுரை கட்டுரைகள்
- [ October 20, 2023 ] மண் வளம் காப்போம் கட்டுரை கட்டுரைகள்
நான் ஒரு பறவையானால் கட்டுரை
- Naan Oru Paravai Aanal Tamil Katturai
இந்த பதிவில் “நான் ஒரு பறவையானால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம்.
பறவைகளை காணும் போதெல்லாம் எழும் கற்பனைகளின் ஆசை வெளிப்பாடே இந்த கட்டுரை.
Table of Contents
நான் ஒரு பறவையானால் கட்டுரை – 1
சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் பறவைகளை காணும் போதெல்லாம் அவற்றை போலவே சிறகடித்து பறக்கும் ஆர்வம் எனக்குள்ளும் எழுவதுண்டு. நான் ஒரு பறவையானால் எல்லைகளற்ற வானவெளியில் என் அகண்ட சிறகுகளை விரிந்து மகிழ்ச்சியாகப் பறப்பேன்.
கவலைகளை எல்லாம் மறந்து, இயற்கையின் அழகுகளை எல்லாம் கண்டு மகிழ்வேன். வானுயர்ந்த மரங்களைக் கொண்ட காடுகளையும், பச்சை பசேலென்ற காடுகளையும், சலசலத்து ஓடும் ஆறுகளையும் தாண்டி உயரப் பறப்பேன். பரந்து விரிந்த சமுத்திரங்களின் மேல் வட்டமடித்து பறந்து, தூய்மையான காற்றை சுவாசிப்பேன்.
மலைகளில் இருந்து விழும் நீர்வீழ்ச்சிகளை அதன் உச்சியில் அமர்ந்தவாறு இரசிப்பேன். வானிலிருந்து பொழியும் மழைத் துளிகளினூடே உற்சாகமாய் பறந்து மழையில் நனைவேன்.
காடுகளில் கிடைக்கும் பழங்களையும், வயல்களில் மின்னும் நெல்மணிகளையும் கொத்தித் உண்பேன். மலைஅடிவாரங்களில் அமர்ந்து நான் இதுவரை காணாத இயற்கையின் அழகான அம்சங்களை கண்டு களிப்பேன்.
நான் ஒரு பறவையானால் அதிகாலையில் துயிலெழுந்து இனிமையான குரலெழுப்பி மனிதர்களிகளின் தூக்கம் கலைவிப்பேன். காலை வேளைகளில் அவசரமாக பள்ளிக்கு ஓடாமல், சூரியக் கதிர்களினூடே சிறகுகளை விரித்து பறப்பேன்.
மாலைகளில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடும் இடங்களில் அமர்ந்து அவர்களின் உற்சாகத்தை இரசிப்பேன். இதுவரை பெற்றோருடன் சென்ற இடங்களில் எல்லாம் தனியாக சுற்றித் திரிவேன்.
ஏனைய பறவைகளுடன் சேர்ந்து அவைகளின் மொழி அறிய முயற்சிப்பேன். இந்த வானவெளியில் என் வலிமையான சிறகுகளை அசைத்து காற்றை ஊடுருவி, இந்த உலகை இரசித்து மகிழ்வுற்று வாழ்வேன்.
நான் ஒரு பறவையானால் கட்டுரை – 2
காலை வேளைகளிலும், மாலை வேளைகளிலும் பறவைகள் வானத்தில் வட்டமிட்டு பறப்பதை பார்த்து இரசிப்பதுண்டு. பறவைகள் சுதந்திரமானவை. அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. எல்லைகளற்ற இந்த வான வீதியில் அவை சுற்றித் திரியாத இடங்களே இல்லை.
அவற்றை பார்த்து இரசிக்கும் போதெல்லாம் நானும் அந்த பறவைகளைப் போல் சிறகடித்து பறக்க ஆவல் எழுவதுண்டு. நான் ஒரு பறவையானால் அவற்றைப் போல் சுகந்திரமாய் பறந்திடுவேன். “கீச் கீச்” என ஒலியெழுப்பி “பட பட” என சிறகுகளை அடித்து உயரப் பறப்பேன்.
வானத்தில் பறந்து செல்லும் விமானங்களுக்கு இணையாக போட்டி போட்டு பறந்திடுவேன். பரந்து விரிந்த மைதானங்களில் தரையிறங்கி ஓய்வாக அமர்ந்திடுவேன். வானளவு உயர்ந்த கோபுரங்களின் உச்சியில் அமர்ந்து என் கிராமத்தின் இயற்கை அழகைக் கண்டுகளித்திடுவேன்.
நகர வீதிகளில் எழும் மாசுக் காற்றிலிருந்து விடுபட்டு, சில்லென்று வீசும் தூய்மையான தென்றலின் குளிர்மையை அனுபவித்திடுவேன். பறவைகள் கூடி வாழும் மரக்கிளைகளிற்கு சென்று அவைகளை போல் கூடு கட்டி அவைகளுடன் ஒற்றுமையாக வாழ்ந்திடுவேன்.
நான் ஒரு பறவையானால் ஓய்வின்றி கடினமாக உழைக்கும் விவசாயிகளின் வயல்கள் தோட்டங்களில் எதையும் பறித்துண்ணாமல் காடுகளில் கிடைக்கும் பழங்கள் மற்றும் விதைகளை மட்டும் உண்பேன்.
வேட்டையாடுபவர்களின் கண்களில் அகப்படாமல் சுதந்திரமாய் பறந்திடுவேன். பறவைகளிடம் உள்ள நற்குணங்களாகிய ஒற்றுமையாக வாழ்தல், உற்சாகமாக வாழ்தல் மற்றும் உழைத்து உண்ணுதல் போன்றவற்றை கற்று அவற்றை என் நண்பர்களிற்கு கற்றுத்தந்திடுவேன்.
அதுமட்டுமல்லாது சுயமாக வாழும் இயல்பையும் கற்றறிந்து அவற்றை என் வாழ்வில் கடைப்பிடித்திடுவேன்.
உடல் நலம் காப்போம் கட்டுரை
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை
- Naan Oru Paravai Tamil Katturai
- நான் ஒரு பறவை ஆனால் கட்டுரை
- நான் ஒரு பறவை கட்டுரை
- நான் ஒரு பறவையானால்
- நான் பறவையானால் கட்டுரை
Copyright © Reserved By All Tamil Tips 2023
- ஆராய்ச்சிகள்
- செயற்கை நுண்ணறிவு
- புகைப்படங்கள்
- NeoTamil TV Original Series
புதிய சாதனை படைத்த நாசா: செவ்வாயில் கார்பன்-டை-ஆக்ஸைடை ஆக்ஸிஜனாக மாற்றியது. அடுத்தது என்ன..?
போலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு, 17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு, கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா அறிவியல் உண்மை என்ன, கணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி, ஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை, ifsc என்றால் என்ன எங்கு, எப்படி பயன்படுகிறது, online interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி 6 முக்கியமான வழிமுறைகள்.
- அரசியல் & சமூகம்
கழுகு (Eagle) பற்றிய 8 வியப்பூட்டும் தகவல்கள்.!
நெருப்புக்கோழி (Ostrich) பற்றிய ஆச்சரியமான 12 தகவல்கள்!
பரவி வரும் பறவை காய்ச்சல்: கேரளாவில் கொல்லப்படவுள்ள 36,000 வாத்துக்கள்… ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களிலும் அச்சம்….
வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே காணக் கிடைக்கும் அரிய வகை பறவை!
கொக்கு, நாரை ஒற்றைக் காலில் நிற்பது ஏன்? காரணம் தெரியுமா?
ஆமை(turtle) பற்றிய ஆச்சர்யமூட்டும் 9 சுவாரசிய தகவல்கள்.
NeoTamil is Tamil Infotainment Media, renowned for its high-quality content. | Latest science news, analysis, opinions and updates.
100 வருடங்களுக்கு முன் அழிந்துபோன அரியவகை ஆமை – தற்போது கண்டுபிடிப்பு
திடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான், முன்னாள் அமெரிக்க அதிபரைச் சுட்டது யார் பதிலளிக்கும் புதிய ஆராய்ச்சி முடிவுகள்.
© 2021 tagDiv. All Rights Reserved. Made with Newspaper Theme.
IMAGES
VIDEO